Latest Games :

Review Games

widgeo.net

Latest Post

மேலும் செய்திகள்

சிரசஊர்த்துவ பத்மாசனம்

| 0 comments

width="200"


செய்முறை:
 
விரிப்பில் இயல்பான சுவாசத்தில் சிரசாசனம் செய்யவும். அதற்குபிறகு வலதுகாலை மடக்கி இடதுதொடையிலும், இடதுகாலை மடக்கி வலது தொடையிலும் வைத்து இடுப்பு பகுதியை நேராக நிமிர்த்துங்கள். இத்தகைய நிலையில் சுவாசம் இயல்பானதாக இருக்கட்டும். கிட்டத்தட்ட 15 விநாடிகளுக்கு பிறகு பத்மாசனத்தை கலைத்து சிரசாசனத்திற்கு போய் மெதுவாக கீழே இறங்கி ஆசனத்தை கலைத்து விடுங்கள்.
 
பயன்கள்:
 
எடை குறையும். தலை சம்பந்தமான வியாதி வராது. மூலநோய் குணமாகும். கண், காது, வாய், மூக்கு, மூளை ஆகிய பகுதிகளின் இயக்கம் சீராக அமையும்.



Continue Reading

கவையாசனம்

| 0 comments

width="200"


செய்முறை:
 
விரிப்பில் சிரசாசனம் செய்து பின் பத்மாசனத்துக்கு வரவும். ஒருசில விநாடிகள் இயல்பான சுவாசத்தில் இருங்கள். இடுப்புக்கு மேலே உள்ள பகுதியை முன்னோக்கி மடக்கி, இரு முழங்கால்களும் பக்கவாட்டில் வருமாறு செய்யவும். இப்படியாக இயல்பான சுவாசத்தில், முடிந்தவரை 15 விநாடிகள் செய்யவும். அதற்குபிறகு மீண்டும் பத்மாசனத்துக்கு போய் சிரசாசனத்துக்கு வந்து, மறுபடியும் பழையநிலைக்கு வந்து கீழே இறங்கவும்.
 
பயன்கள்:
 
முதுகு தண்டு வலி, இடுப்பு வலி வராது. உடல் வலுவுடன் மனவலிமையும் கூடும். பைல்ஸ் பிரச்சினை நீங்கும்.




Continue Reading

முக்த சிரசாசனம்

| 0 comments

width="200"


 
செய்முறை:
 
விரிப்பில் கால்களை நீட்டி தவளை ஆசன நிலைக்கு வரவும். வலது கையால் இடது முழங்கையையும், இடது கையால் வலது முழங்கையையும் பிடியுங்கள். இரண்டு கைகளுக்கு மத்தியில் உச்சந் தலையை வைக்கவும். நெற்றிக்கு முன்னால் இருகால்களையும் கொண்டு வாருங்கள்.
 
கால்களை தரையில் வைத்து மெல்ல மேல் நோக்கி தூக்கி சிரசாசனத்தில் நிற்கவும். அதாவது, இது உடலை செங்குத்தான கோட்டில் நிறுத்துவதாக அமையவேண்டும். இந்தநேரத்தில் உடம்பு இலகுவாக இருப்பது முக்கியம். அப்போது ஒட்டு மொத்த உடம்பின் எடை, இரு முழங்கை பகுதியிலும் உச்சந்தலையிலும் சமமாக இறங்க வேண்டியது அவசியம்.
 
பயன்கள்:
 
கை-கால்களில் சோர்வு அகலும்.தலைப்பகுதிக்கு ரத்தம் பாய்வதால் வயிறு, மார்பு, நுரையீரல், இதய பகுதிகளுக்கு சீரான ரத்தஓட்டம் கிட்டும்.




Continue Reading

ஹஸ்த சிரசாசனம்

| 0 comments

width="200"


செய்முறை:
 
விரிப்பில் வஜ்ராசன நிலையில் உட்காரவும். அதற்குபிறகு, சற்று முன்பு குனிந்து உச்சந்தலையை தரையில் வைத்து, இரு புறங்கைகளும் தரையில் படுமாறு `வி' வடிவில் வையுங்கள். முழங்கையை நிமிர்த்தி பாதங்களை உள்ளே கொண்டு வரவும். ஒவ்வொரு காலாக இடுப்பளவு தூக்கி நிறுத்தி, அதற்குபிறகு முழங்கால்வரை நீட்டுங்கள்.
 
அதற்குபிறகு பாதங்களை மேலே கொண்டு வந்து சிரசாசன நிலைக்கு வரவும். இப்படியாக 15 விநாடிகள் இதே நிலையிலிருந்து, படிப்படியாக கால்களைகீழே இறக்குங்கள். ஒரு சில விநாடிகள் ஓய்வெடுத்த பிறகு, தலையை மேலே தூக்கி, மறுபடியும் இயல்பான நிலைக்கு வரவும்.
 
பயன்கள்:
 
பந்து கிண்ணமூட்டில் இருந்து விரல் நுனிவரை இரு கைகளின் அனைத்து பகுதிகளிலும் ரத்தம் பாய்கிறது. இதனால் கைகளில் எந்த காலத்துக்கும் குறைபாடு வராது.




Continue Reading

பூங்கொடி ஆசனம்

| 0 comments

width="200"


செய்முறை:
 
இயல்பான சுவாசத்தில், சிரசாசன நிலைக்கு வரவும். வலது காலை லேசாக மடக்கி, இடது காலால் வலதுகாலை  மெல்ல சுற்றவும்.  அடுத்த படியாக இதையே மாற்றி செய்யவேண்டும்.
 
பயன்கள்:
 
பாத வலி, மூட்டுப்பிடிப்பு, கால் வீக்கம், காலில் நரம்புகள் புடைத்து சுருக்கிக்கொள்ளுதல் போன்ற நோய்கள் குணமாகும்.




Continue Reading

சாந்தி ஆசனம்

| 0 comments

width="200"


செய்முறை:
 
விரிப்பில் மல்லாந்து படுக்கவும். பாதங்கள் இரண்டும் தொடாமல் அகண்டிருக்கட்டும். கைகள் இரண்டையும் உள்ளங்கை மேல்நோக்கி இருக்குமாறு உடலோடு ஒட்டி வையுங்கள்.  பாதங்கள், முழங்காலின் ஆடுசதை, புறங்கைகள், முழங்கைகள், தோள்பட்டை பகுதி, பிடரி ஆகியவை தரையோடு படிந்த நிலையில் இருப்பது அவசியம். இயல்பான சுவாசத்தில் மனதை செலுத்தவும்.
 
கண்களை மூடி அகமுகமாக உடலை உற்று நோக்குங்கள். இந்த நிலையில் உடல் பாரமற்றதாகிறது. எடையை தரை தாங்குவதால், உடலின் அத்தனை உள்-வெளி உறுப்புகளுக்கும் பூரண ஓய்வு கிட்டுகிறது. அதற்குபிறகு, இடதுகால் கட்டை விரலில் தொடங்கி, ஒவ்வொரு பகுதியும் `சாந்தி பெறுவதாக' என்று சொல்லவும்.
 
அப்படியே உச்சந்தலை வரைக்கும் வாருங்கள். அதற்குபிறகு இரு புருவ மத்தியில், ஓரங்குல தீபம் எரிவதாக நினைத்துக்கொள்ளவும். இந்த நிலையில் சில நிமிடங்கள் இருந்து பின் மூச்சு ஓட்டத்தை கவனியுங்கள். தீபத்தின் சுடர் உள் சுவாசத்தோடு கரைந்து உடலெங்கும் ஒளி, தேஜஸ் பரவுவதாக, உங்களை நினைக்க செய்யும்.
 
அதற்குபிறகு கை- கால்களை லேசாக அசைத்து கண்களை திறந்து, வலது கையை தலைக்கு மேல் தூக்கி தரையில் வைக்கவும். இடதுகாலை மடித்து  வலப்பக்கமாக திரும்பி, இடது உள்ளங் கையை வயிற்றுக்கு முன்பாக ஊன்றி மெல்ல எழுந்து உட்காரவும்.
 
பயன்கள்:
 
புது உற்சாகமும், தெம்பும், சுறுசுறுப்பும் கிட்டும். உடல் ஓய்வுக்கு மட்டுமின்றி மனஅமைதிக்கும் இவ்வாசனம் உதவும்.




Continue Reading

ஆரோக்கிய ஆஸ்தி

| 0 comments

width="200"


 
ஆரோக்கியமான சமுதாயமே வளமான சமுதாயமாக மலரும். அதற்கு யோகக்கலை நல்ல அடித்தளம் அமைத்து தருகிறது. மனிதனின் அதி ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான  யோகாசனங்களையும் அன்றாடம் செய்து வாருங்கள். ஆயுள் பூராவும் நோய்-நொடியின்றி நிம்மதியாக வாழலாம்.
 
நேரம் இல்லையெனில்-குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது யோகா செய்யுங்கள். இதில் 20 நிமிடம் யோகா, 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி, 5 நிமிடம் தியானம் செய்து வந்தாலே, பல்வேறு நன்மைகளை பெற்றிட இயலும். யோகாசனம் ஒரு சாகரம்.  ஆசனங்களை செய்யுங்கள்.
 
ஆதாயங்களை அள்ளலாம். யோகத்தை உங்கள் சந்ததியின் ஆஸ்தியாக்குங்கள். ஆரோக்கியமும் அறிவும் அழகும் தானே வந்துசேரும்




Continue Reading
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. யாழ் நதி - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger